Thursday, March 14, 2013

2 நண்பர்கள் சந்தித்த போது..(part 2)



தாமு : மச்சி அடுத்த மாசம் பைக் வாங்க போறேன்டா...  காசு எங்கடா??

ரமேஸ் : டேய் பத்தரமா இருக்குடா.. கவலைபடாதே..

தாமு : டேய் நாயே காச வச்சி வீடு வாங்கிடா??

ரமேஸ் : நான் எப்படா வீடு வாங்கினேன்??

தாமு : பத்தரம் வச்சிருக்கேன்னு சொல்லுற??வீடு வாங்காம பத்திரம் மட்டும் எப்படிடா வரும் ???

ரமேஸ் :   டேய்??  இப்படிலாம் பேசுன இனி என் கை பேசும்..

தாமு : என்னது கைபேசியா??? போனும் வாங்கிடா???

ரமேஸ் : ???????

Friday, March 8, 2013

ஒரு கேண்டீனில்..

ஒரு கேண்டீனில் ஒரு பெண்ணும் பையனும் டீ குடிச்சிகிட்டே பேசுறாங்க...
 
பையன் :
என்ன உன் தோழி இப்பலாம் உன் கூட டீ குடிக்க வரவே மாட்டுரா?? 

பெண் :
அவளுக்கும் எனக்கும் சண்டடா..

பையன்: எப்படி டீ..

பெண்: டீ சுமாரா தான் இருக்கு..

பையன்: ஹே  அது இல்ல..  ஏன்?? என்ன பிரச்சனை??

பெண்:          
அவ கிட்ட திருப்பி தாரேன்னு 2000ருபாய் வாங்கினேன்.  நான் திருப்பி தரும்போது கிட்டத்தட்ட 2000 ருபாய் கூட கேட்டா.. அதான்..

பையன்: அப்படி எவளோ கேட்டா அவ??
பெண்: நான் 2000ரூபாய திருப்பி  0002 ரூபாயா கொடுத்தேன்.. அவ 1998 ரூபா எக்ஸ்ட்ரா கேக்குறா??

பையன்:  ???????    

Monday, March 4, 2013

ஒரு வகுப்பறையில்...

வகுப்பறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சண்டை வந்தது..

ஒரு பையன் எழுந்து "பெண்ணாக இருந்தாலும் சுவிட்ச்சை on செய்தால் தான் லைட் எரியும் என்றான்"

ஒரு பெண் எழுந்து "ஆணாக இருந்தாலும் penல தான் எக்ஸாம் எழுத முடியும் என்றாள் "

அதற்கு அந்த பையன் மீண்டும் எழுந்து "சுவிட்ச்ச on பண்ணினா தான் மெசின் ஓடும் அப்ப தான் பேப்பர் வரும்.. அப்பறம் தான் pen வச்சி எழுத முடியும் என்றான்"

அப்பறம் டீச்சர் டென்ஷன் ஆகி ஒழுங்கா ஓடிருங்க இல்ல தொலச்சிருவேன்னு சொன்னாங்க..

அதற்கு ஒருவன் டீச்சர் ஓடி போனா தான் தொலைஞ்சி போய்டுவோம்.. நாங்க இங்கயே இருக்கோம் டீச்சர்ன்னு சொன்னான்..

-------------------------------நல்லா இல்லையோ.................

Friday, March 1, 2013

2 நண்பர்கள் சந்தித்த போது...

மச்சி அந்த நாய் குட்டிய பாருடா அழகா இருக்குல??
மச்சி ஒரு டவுட் டா??

என்னடா??

ஏன்டா நாய குட்டின்னு சொல்லுறோம்??


இல்ல மச்சி.. ஹிந்தில பெண் நாய குத்தின்னு சொல்லுவாங்க.. அது கால போக்குல, மொழிபெயர்ப்புல  குட்டின்னு மாறிடுச்சி டா..

இல்ல டா.. குட்டின பொண்ணுங்கள தான் சொல்லுவாங்க..

எப்படிடா அப்படி சொல்லுற

பொண்ணுங்க அழகா டீ போடுவாங்க.. எல்லாரும் அதை குட்ன்னு பாராட்டுவாங்க.. குட்டீன்னு இருந்தது கால போக்குல குட்டின்னு மாறிடுச்சி..

 .................. கோவபடாதீங்க............... :)