Tuesday, April 2, 2013

காதல் கிறுக்கல்கள்..


பெண்ணே..!!! என்னை கடந்து செல்வதோ உன் கால்கள்தான் ஆனால் இடைவெளியோ என் இதயத்தில்..!!!

குலுங்கிய பீரில் வரும் நுரைபோல உன்னை பார்த்ததும் என் மனது குலுங்கி உதடு சிரித்து விடுகிறது....!!!

ஒயின் ஷாப்பில் குடித்தாலும் பாரில் குடித்தாலும் போதை ஒன்று தான்.. அது போல நாம் காரில் போனாலும் நடந்து போனாலும் நம் காதல் ஒன்று தான்..

கஜினி முகமது படை எடுத்ததை போல கடற்கரையில் உன் கால்களை தொட ஓடி வரும் அலை..

பெண்ணே..!! உன் கண்கள் என்ன காந்தமா?? தூசி கூட உன் கண்ணில் ஒட்டி கொள்கிறதே..

பெண்ணே..!!  என் காதல் கண்டிஷன் இல்லாத for loop போல , உன் நினைவுகள் infiniteஆக ஓடிக்கொண்டு இருக்கிறது..  

பெண்ணே..!! என்னை பார்த்தல் இருடேட்டிங் ஆக இருக்கிறது என்கிறாயே.. நாம் இன்னும் ஒருமுறை கூட டேட்டிங் செல்லவில்லை என்பதை மறந்து விட்டாயா?? 

-----------------------இப்போதைக்கு இது போதும்......