Friday, October 18, 2013

ஒரு பேருந்து நிறுத்தத்தில்...

ஒரு பேருந்து நிலையத்தில்  நான் பார்த்தது...

ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண் மிகவும் படபடப்பாக நின்று கொண்டுஇருந்தாள்..

அவள் ஒரு பேருந்துக்காக வெகுநேரம் காத்துகொண்டு இருந்தாள்.

அந்த வழியில் ஒரு பேருந்து வந்ததும் விரைவாக ஓடினாள்.ஆனால் அந்த கூட்டத்தில் அவளால் ஏற முடியவில்லை..




மற்றொரு பேருந்தும் வந்தது.. அதில் ஏற அவள் விரைந்தும்  அவளாள் ஏறமுடியவில்லை..

அதுத்த கனமே மற்றொரு பேருந்தில் ஏறினாள்..  அது பிற பேருந்தை விட டிக்கெட்டின் விலை மலிவாகவும் இருந்தது.. முந்தைய பேருந்தை போல் கூட்டமாக  இல்லாமல் அவளுக்கு உட்கார இடமும் கிடைத்தது..

அவள் பயணித்து செல்லும் பாதையில் பார்த்தாள்.. முன்னே வந்த பேருந்துகள் கூட்ட நெரிசலால் நின்றுகொண்டிருந்தது.. ஆனால் அவர் ஏறிய பேருந்து எல்லாவற்றையும் தாண்டி முன்னே சென்றுகொண்டிருந்தது..

                                          

அவளும் சந்தோசமாக பயணித்து செல்ல விரும்பும் இடத்திற்கு விரைவில் சென்றாள்..

அவள் எதற்க்காக படபடப்புடன் நின்றாள் என்று எனக்கு தெரியாது.. ஆனால் எனக்கு அப்பொழுது தான் நான் புரிந்தது.. நமக்கென்று கிடைக்கும் ஒன்று தாமதமாக கிடைத்தாலும் நம் மனதிற்கு அது பின்னே சந்தோசம் அளிக்கும் ..!!


Friday, October 4, 2013

இரு திருடர்களின் கதை.

இரண்டு பேர் கொள்ளை அடித்த காரணத்திற்க்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.. 2 வருட தண்டனை அது.  அவர்கள் தான் செய்த தவறை எண்ணி வருத்தப்பட்டுகொண்டு இருந்தனர்..

இதான் அவர்கள் கதை(கற்பனை கதை)..  

இரண்டு பேர் கார் பழுதடைந்த நிலையில் காருக்கு வெளியில் நின்றுகொண்டுஇருந்தனர்.. அங்கு வரும் அனைத்து காரிடமும் லிப்ட் கேட்டுக்கொண்டுஇருந்தனர்.

அப்பொழுது அந்த புறமாக வந்த மற்றொரு வண்டி நின்றது. அந்த காரில் இருந்து ஒருவர் இறங்கி என்னவென்று கேட்க நின்று கொண்டிருந்ததில் ஒருவன் அவன் தலையில் ஒரு கட்டையால் அடித்தான்..  வலி தாங்க முடியாமல் அவன் கத்த இன்னொருவன் வாயை மூடி பணம் எவளோ வைத்திருகிறாய் என்று மிரட்ட, அவன் உள்ளே உள்ள பர்சில் 8000 இருப்பதாக கூறுகிறான்..

ஒருவன் சென்று பர்சை எடுக்க கதவை திறக்கிறான்.. உள்ளே அவனது நண்பன் ஒருவன் அருகில் உள்ள பூச்சி கொள்ளும் ஸ்ப்ரேவை அவன் கண்ணில் அடிக்கிறான்.. அதில் அவன் கத்தி கீழே விழ, இன்னொருவன் பிடியில் இருந்த நபரை விட்டு கட்டையை எடுத்து அடிக்க வருகிறான்..

காரில் இருந்து இறங்கியவன் அந்த ஸ்ப்ரேவை கைக்கு பின்னே வைக்க, அடிக்க வந்தவன் என்னவென்று தெரியாமல் பதற்றத்தில் கட்டையை சுற்ற , கீழே விழுந்து இருந்த நண்பன் , கல்லை விட்டு எரிய அவன் கண்ணிலும் அடித்து விடுகிறார்கள்.. காரில் இருந்த இருவரும் அவர்களை சரிமாரியாக அடிக்கிறார்கள். அதில் அந்த திருடனில் ஒருவனுக்கு கண் அழிய மற்றொருவனுக்கு தலையில் பலத்த காயமாகிறது.

அப்பொழுது அவர்கள் கண்ணில் 1.50 லட்சம் தென்படுகிறது  ஒரு திருடனில் பேன்ட்டில். எடுத்தவன் மச்சி சதிஸ் இத நாம எடுத்துக்கலாம் என்று கூறுகிறான். அவனும் ஓகே சொல்ல, பணத்தை எடுத்து சென்று விட்டனர்..

வீட்டுக்கு சென்றதும் அவர்கள் உரையாட துவங்குகிறார்கள்.. இறுதி முடிவாக, அந்த 1.50 லட்சத்தை ஒரு மாதம் கழித்து செலவழிக்கலாம் என்றும், அந்த பணத்தில் என்ன வாங்க வேணுமென்று கனவு காண துவங்க,மறுநாள் காலையில் போலீஸ் அவர்களை தேடி வந்துவிட்டது..
பிடிபட்டதன் காரணம் அவர்களை அடித்ததற்காக இல்லை.. அந்த 1.50லட்சம் இன்னொருவருடையது. இவர்கள் எடுக்கும் அரைமணிநேரத்துக்கு முன்பு, அந்த திருடர்கள் இவர்களிடம் இருந்து எடுத்துஉள்ளான் என்று தெரிய வந்தது..


திருடிய குற்றத்துக்காகவும், திரும்பி கொடுத்ததற்காகவும், மூன்று நாட்களில் சிறையை வெளியே வந்தனர்..  அப்பொழுது அங்கு இருந்த கான்ஸ்டபில் ஒருவரிடம் விசாரித்தனர். எப்படி எங்களை பிடித்தீர் என்று.  அவர் மறுக்க, இறுதியில் கூறினார், சுங்கச்சாவடியில் பதிவான காரின் நம்பர், மற்றும் பணம் எடுக்கும் போது கூறிய சதிஸ் என்ற பெயரே என்று கூறினார்..

அப்பொழுது அவர்கள் செய்த தவறை(தடயத்தை) நினைத்து முதன்முறை வருந்தினர்..