ஒரு பேருந்து நிலையத்தில் நான் பார்த்தது...
ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண் மிகவும் படபடப்பாக நின்று கொண்டுஇருந்தாள்..
அவள் ஒரு பேருந்துக்காக வெகுநேரம் காத்துகொண்டு இருந்தாள்.
அந்த வழியில் ஒரு பேருந்து வந்ததும் விரைவாக ஓடினாள்.ஆனால் அந்த கூட்டத்தில் அவளால் ஏற முடியவில்லை..
மற்றொரு பேருந்தும் வந்தது.. அதில் ஏற அவள் விரைந்தும் அவளாள் ஏறமுடியவில்லை..
அதுத்த கனமே மற்றொரு பேருந்தில் ஏறினாள்.. அது பிற பேருந்தை விட டிக்கெட்டின் விலை மலிவாகவும் இருந்தது.. முந்தைய பேருந்தை போல் கூட்டமாக இல்லாமல் அவளுக்கு உட்கார இடமும் கிடைத்தது..
அவள் பயணித்து செல்லும் பாதையில் பார்த்தாள்.. முன்னே வந்த பேருந்துகள் கூட்ட நெரிசலால் நின்றுகொண்டிருந்தது.. ஆனால் அவர் ஏறிய பேருந்து எல்லாவற்றையும் தாண்டி முன்னே சென்றுகொண்டிருந்தது..
அவளும் சந்தோசமாக பயணித்து செல்ல விரும்பும் இடத்திற்கு விரைவில் சென்றாள்..
அவள் எதற்க்காக படபடப்புடன் நின்றாள் என்று எனக்கு தெரியாது.. ஆனால் எனக்கு அப்பொழுது தான் நான் புரிந்தது.. நமக்கென்று கிடைக்கும் ஒன்று தாமதமாக கிடைத்தாலும் நம் மனதிற்கு அது பின்னே சந்தோசம் அளிக்கும் ..!!


No comments:
Post a Comment