தஞ்சை பெரிய கோவில்..
இங்கு வந்தால் பக்தியையும் மிஞ்சும் அளவிற்கு அழகையும் இந்த கோவில் வைத்திருக்கிறது..எல்லா இடத்திலும் அழகிய சிற்பங்களால் செதுக்கப்பட்டுள்ளது..
கருமேகம் சூழ்ந்த இடத்தில் இந்த மஞ்சள் வெயில் கோபுரங்களில் படுகையில் இயற்கையே சிற்பங்களுக்கு தங்க போர்வை போர்த்தியது போல இருந்தது...
கோபுரத்தை சுற்றிலும் தமிழ் சூழ்ந்து உள்ளது...இங்கு வந்தபின் நாம் தமிழன் என்று பெருமை படுவோம்...
கற்களை உடைத்து கட்டிய இந்த கோபுரங்கள், எந்த கல்மனதையும் சுலபமாக கவர்ந்து இழுக்கும் அழகு, பெருமை, எல்லாம் உண்டு.....
--------------------------------------------------------------------------------------------------