Wednesday, February 27, 2013

ஒரு சின்ன கருத்து

ஒரு வயதான பெண் பேருந்தில் சென்று கொண்டு இருந்தார்..

நான் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து  இருந்தேன்..
என் அருகில் இருந்த வாலிபன் தன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.

அதுக்கு அந்த  பாட்டி நன்றி சொன்னார்.
ஒரு 10 நிமிடம் கழித்து  அந்த பாட்டி இறங்கும் இடம் வந்தது.

அப்பறம் அவள் தனக்கு வேண்டிய ஒருவளை அந்த இடத்தில் அமர செய்தாள்..

ஆனால் அந்த வாலிபன் அதை கண்டுகொள்ளவில்லை.. அவனுக்கு அது பெரிதாக படவில்லை..

ஆனால் அந்த பெண் உணர்ந்திருக்க வேண்டும், அந்த வாலிபனுக்கு கொடுக்கணும் என்று..
ஒரு சாதாரன ஒரு விசயத்துக்கே ஒருவர் தனக்கு செய்த உதவியை மறந்து மற்ற ஒருவருக்கு கொடுக்கிறார் என்றால் இந்த நாட்டில் எப்படி சிபாரிசு இல்லாமல் இருக்கும்...  

கிரிக்கெட் கிறுக்கல்கள்...

பெண்ணே .. உன் பின்னால போனதுக்கு பதில் பந்து பின்னால போயிருந்தா பௌன்றியயாவது தடுத்திருப்பேன்...

காதல் கவிதையை காகிதத்தில் கிறுக்கி நாம் கெட்டு போவதால் தான் கிரிக்கெட் என்று பெயர் வைத்தார்களோ...

அன்பே நீ என்ன கெயிலா.. என் மனதை அடித்து நொறுக்குகிறாயே ...

பெண்ணே உன் காதல் கிரிக்கெட்டில் என்னையும் சேர்த்துக்கொள்.. அவுட் ஆகாமல் இருப்பேன்...

பெண்ணே நாம் பழகியதை ரிப்ளே போட்டு பாக்காமல் என்னை அவுட் ஆக்காதே உன் மனதில் இருந்து....