Sunday, March 23, 2014

பிச்சாவரம்... ஒரு அழகின் அழகு...

சில இடங்கள் நம் நினைவில் நிற்கும்..
சில இடங்கள் நம் கண்ணை விட்டு பிரியாது..





 அது போன்ற இடகளில் ஒன்று தான் இந்த பிச்சாவரம்..   சிதம்பரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..



கடல் நீரில் மாங்குரோவ் காடுகள் சூழ்ந்திருக்க சிறு சிறு தீவுகளாக பச்சை பசேரென்று அழகாக தோற்றமளிக்கும் இடம் இது..


ம்ம்ம்.. சொல்ல மறந்துட்டேன்..இங்கு உள்ள மாங்குரோவ் காடுகள் தான் உலகத்திலேயே இரண்டாவது பெரிய மாங்குரோவ் காடுகள்..


இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல பறவைகளுக்கும் ஒரு சுற்றுலாதளமாகவே உள்ளது..



உள்ளே சென்றதும் அதன் அழகை ரசிப்பதை தவிர வேறு எதுவும் மனது நினைக்காது..


இந்த இடத்தை நேரில் பார்ப்பதில் கிடைக்கும் திருப்தி எந்த ஒரு கேமராவாலும் கொடுத்துவிட முடியாது..


வேறு என்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியல.. பிச்சாவரம் = அழகு..






நான் சொன்னது ஒரு புள்ளி அளவு கூட இல்லை...  எல்லாரும் காணவேண்டிய இடம் இது...

Monday, February 10, 2014

இந்த கிரிக்கெட் விசிறிகளுக்கு என்ன தான் வேணும்...

இந்த கிரிக்கெட் விசிறிகளுக்கு என்ன தான் வேணும்.....


பொதுவாகவே இந்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவின் மிகப்பெரிய போராட்ட தியாகியாகவே தன்னை காட்டிக்கொள்வார்கள்..

சரி.. இவர்கள் இந்தியா மீது பற்று கொண்டவர்களாகவே இருக்கட்டும்..  போன மாதம் குடியரசுதினத்தில் தேசியக்கொடியைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஏன் சுதந்திரதினத்திர்க்கே கூட பார்த்திருக்க மாட்டார்கள்..
இதில் ஒரு பெரிய விசயமே என்னவென்றால் இது ஒரு தனியார் நிறுவனம்..
இத பத்தி பேசஆரம்பிச்சால்., நீ ஒரு இந்தியன் இல்லை , நீ ஏன் இந்தியால இருக்க ? எப்படில்லாம் கேள்வி நம்மீது எழும்..

ஒரு வேலை இவர்கள் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களா என்று பார்த்தால், அதுவும் இருக்காது ...  இவர்கள் அதிகமாவே பேசுவது, ஒரு வேலை இந்த பந்து சிக்ஸ் போயிருந்தால் இந்தியா ஜெயிச்சிருக்கும்..  இந்நேரம் தோணி மட்டும் இருந்தா,சச்சின் மட்டும் இருந்தா இந்திய ஜெயிச்சிருக்கும்.. இந்த மாதிரி சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருப்பாங்க..

சரி.. ஒருவேலை இவர்கள் கிரிக்கெட் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை..   அது அவுட்டே இல்லடா .. அம்பயர் ஏமாத்திட்டான்..  அதுக்கு சரியா சொல்லிருந்தா , இந்நேரம் இந்தியா ஜெயிச்சிருக்கும்.. ஏண்டா போன மேட்ச்ல அவுட்க்கு நாட்அவுட் சொன்னானே அப்போ எதுவும் நீ சொல்லவே இல்லன்னு சொன்னா, அதுக்கு ஒரு பதிலும் கிடைக்காது...

இவங்ககிட்ட எதுவும் பேசவே முடியாது... சொன்னனதே சொல்லும் கிளிப்பிள்ளை போலவே, இந்தியா இந்தியான்னு சொல்லுவாங்க..  இப்படித்தான் ஒருவனிடம்  சரி இந்தியா இந்தியான்னு சொல்லுறியே  இந்தியாவில் மொத்தம் எவளோ மாநிலம் இருக்குன்னு கேட்டேன்.. அவன் முழிக்க ஆரம்பிச்சிட்டான்..;)

எனக்கு அவங்கள பாத்தா என்ன சொல்லுறதுன்னே தெரியல..  இத பத்தி
 பேச ஆரம்பிச்சா நான் மொக்க போடுறேன்னு சொல்லுவாங்க..  இதபத்தி பேசவே இல்லாம இருந்தா, நமக்கு போன் பண்ணி நம்மகிட்ட ஸ்கோர் கேப்பாங்க.. சரின்னு ஸ்கோர்ரும் சொன்னோம்பா அதுக்குள்ள 2 பேரு அவுட் ஆகிட்டாங்களான்னு நம்மள திட்டுரமாதிரி பேசஆரம்பிச்சிருவாங்க...


என்ன கொடும சார் இது.....

Saturday, December 21, 2013

எனக்கு ஹெட் செட் வேணவே வேணாம்..

நண்பன் 1 : என்னடா நெட்ல பாக்குற..

நண்பன் 2 : சும்மா ஷாப்பிங் மச்சி..

நண்பன் 1 : என்ன வாங்க ??

நண்பன் 2 : ஹெட் செட் வாங்க போறேண்டா..

நண்பன் 1 : ஓ.. ஓகே ஓகே... நானும் வாங்கணும்டா.. எந்த ஹெட்செட் நல்லா இருக்கும்..

நண்பன் 2 : அதைதான்டா நெட்ல தேடிட்டு இருக்கேன்..

நண்பன் 1 : சோனியா??

நண்பன் 2 : சொல்லுடா ?? சோனியா என்ன சொல்லுறா ?? பிரதமர் வேட்பாளர அறிவிக்க போராளாமா ???

நண்பன் 1 : இல்லடா.., sony நல்லா இருக்கா??? 

நண்பன் 2 : <<<so  நீ>>> ஓ.. அத கேக்குறியா???  நான் நல்லா இருக்கேன்டா..

நண்பன் 1 : அது செரிடா ... sony எப்படி ???

நண்பன் 2 : டேய்.. நான் நல்லா இருக்கேன் டா.. எத்தன தடவடா கேப்ப ??

நண்பன் 1 : டேய் ,, ஹெட் செட்ல sony எப்படி ??? 

நண்பன் 2 :  நானும் ஹெட்செட் தாண்டா வாங்குறேன்...

நண்பன் 1 : டேய்... நான் சொல்லுறது உனக்கு புரியுதா இல்லையா ???

நண்பன் 2 : நான் எப்படி இருக்கேன்னு தான கேக்குற???

நண்பன் 1 : நான் எப்படா அப்படி கேட்டேன் ? 

நண்பன் 2 : சோ நீ எப்படின்னு கேட்டையே ?? 

நண்பன் 1 : டேய்???? நான் சோ நீ சொல்லல,,, சோனியான்னு கேட்டேன் 

 நண்பன் 2 : டேய் .. அததான் நான் மோதலையே கேட்டேன்ல.. நீ தான் சொல்லல.... சோனியா என்ன சொன்னா ???? 

நண்பன் 1 ::: எனக்கு ஹெட்செட்டே வேணாம்... நீயே பாரு ...

Sunday, November 24, 2013

2 நண்பர்கள் சந்தித்த போது part 3

                              2 நண்பர்கள் சந்தித்த போது part 3

நண்பன் 1: மச்சி கடல் செம அழகா இருக்குடா...

நண்பன் 2 : ஆமாடா.. அதுவும் அந்த அலையபாருவே., நிக்காம வந்துட்டே இருக்குல..

நண்பன் 1 : ஆமாம்டா... எப்படிடா அலை நிக்காம வந்துட்டே இருக்கு..???


நண்பன் 2 : அதுடா.. அந்த காலத்துல ஒரு பையன்கிட்ட கடல்ல இருந்து ஒரு பொண்ணு  பேசுச்சாம்.. அது  ஒரு அலைல எப்பயாச்சும் வருமாம் .. அந்த பையன் அப்போ தான் ஸ்கூல்க்கு போனானாம் ,அந்த பையனுக்கு நம்பர்ல பத்து வரைக்கும் தான் தெரியும்..  ஒரு நாளு, உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டுச்சாம்.. நான் போதும்ன்னு சொல்லுரவரைக்கும் நீ என்கிட்டே வந்து பாத்து பேசுவயான்னு கேட்டானாம்..அதுக்கு அந்த பொண்ணும்  சரி சரின்னு சொல்லி அப்பப்ப வந்துட்டே இருந்துச்சாம்.  அந்த பையன் ஒவ்வொரு தடவையும் அந்த பொண்ணு வரும் போதுலாம் அவன் எண்ணிட்டே இருந்தான்..அப்பறம் லேட் ஆகிடுச்சி நான் கெளம்புறேன்,உன்ன பாக்க எத்தன தடவ வந்தேன்னு பாத்தியான்னு கேட்டுச்சாம்.. அதுக்கு அவன் ஆமாம் பத்தலைன்னு(பத்து அலை) சொன்னான். அதுக்கு அந்த பொண்ணு ஐயோ பத்தலையா உனக்கு ,சரி நான் மறுபடியும் வாறேன்னு சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் வந்துட்டே இருக்குடா ...

நண்பன் 1 : மச்சி உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குடா...


-----------இது மூலமா நான் எதுவும் சொல்லவல்ல.. சும்மா எதாவது போடனும்ல அதுக்காகத்தான் ..:)




Friday, November 8, 2013

சும்மா ஒரு கதை...

சில நண்பர்கள் பேசுகின்றனர்...

டேய் மச்சான் என்னைய மட்டும் ஏமாத்தித்து அவ மட்டும் சந்தோசமா இருக்கா, அவ சந்தோசத்த கெடுக்கணும், அவ கல்யாணம் நடக்க கூடாதுன்னு நைட் நேரம் ஒரு நாலு பேரு குடிச்சிகிட்டே ஒரு திட்டம் போட்டாங்க... ஒரு கெட்ட நேரம் என்னன்னா அதில் ஒருவன் மட்டும் குடிக்கல.. மத்த எல்லாரும் குடித்து போதையில் சம்மந்தம் இல்லாமல் தப்பு தப்பாக சில தகவலை பரிமாறுகின்றனர்..

அதை கேட்ட குடிக்காதவன், உண்மை என நம்பி,அவள் இருக்கும் தெருவுக்குள் வர..அங்கு ஒரு பெண் செம மேக்கப்புடன் வருகிறாள்..


அவளை கண்டதும் அவன் நண்பனின் காதலி என்று வியந்து அவன் நண்பனிடம் பேசுகிறான்..அவனும் போதையில் ஆம்மாம் என்று உளற, அவளை ஏமாற்றி கடத்துகிறான்..

அவள் தடுமாறி, அவனிடம் சிக்குகிறாள்.. அவன் அந்த பெண்ணை ஒரு அடர்ந்த காட்டுக்குள்ளே ஒரு தனிமையான இடத்திற்கு செல்கிறான்.

திடீரென்று வந்த காட்டு யானையால் அவர்கள் பயந்து ஒருவரை ஒருவர் உதவி நாடி, பேச ஆரம்பிச்சனர்.. அப்பொழுது தான் தெரிய வந்தது அந்த பெண்ணுக்கும் அவன் நண்பனுக்கும் சம்மந்தமே இல்லை..
ஆனாலும் அவள் சந்தோஷமாக பேசினாள்..

பிறகு அவர்கள் காட்டில் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர்.. அந்த பெண் மிகவும் சந்தோஷமாக இயற்க்கையை ரசித்தபடி இருந்தாள்..

அப்பொழுது அவன் அவளிடம் நான் உன் அனுமதி இல்லாமல் ஏமாற்றி கூட்டி வந்தேன்.. ஆனால் நீ அதற்க்கு மாறாக சந்தோஷமாக இருக்கிறாய்.. எப்படி என்றான்..

அதற்க்கு அவள், என்னோட அம்மா என் சிறுவயதிலேயே இறந்துவிட்டாள்..  என்னோட அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டார், அன்னைல இருந்து என்னோட சந்தோசம் எல்லாம் அழிஞ்சிருச்சி...  நான் எங்க பக்கத்‌து தெருக்குக்கூட போனது இல்ல.. எங்க பக்கத்து தெருவுல இருக்குற என்னோட ஃப்ரென்ட்டோட கல்யாணத்துக்கு வந்தேன்.. ஆனா இந்த மாதிரி ஒரு இடத்துக்கு வருவேன்னு நினைக்கவே இல்ல... நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்னு சொன்னாள்...

அதைக்கேட்ட அவனும் இவள்தான் நமக்கு பொறுத்தமானவள் என்று அவளை காதலிக்க ஆரம்பித்தான்.. கொஞ்ச நாளிலே அவளும் அதற்க்கு ஒத்துக்கொள்ள, காட்டை விட்டு செல்கையில் காதலர்களாக செல்கின்றனர்..



Wednesday, November 6, 2013

ஒரு வகுப்பில்

ஒரு வகுப்பில்...
ஒரு பையன்.. அவனது தொலைபேசி காணாமல் போனது..

அவன் ஒரு மொபைல் வாங்க யோசித்தான்,..

இறுதியில்  வாங்கினான்... அதில் ஒரு புதிய சிம் கார்ட் போட்டான்..

அவன் மனதில் இந்த மொபைலில் சேகரிக்கும் முதல் எண் அவள் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று யோசித்தான்..

அதற்காக  ஒரு நாள் அவள் அருகில் அமர்ந்து, அவளுக்கு பரிச்சையில் பதிலை காண்பிக்க ,அவன் டீச்சர்ரிடம் மாட்டினான்..

பிறகு சில நாட்களுக்கு பிறகு,  அவன் ஒரு செமினார்ரில் அவன் எண்ணை சொல்லி ஏதேனும் குறையோ சந்தேகமோ இருந்தால் கூறவும் என்று சொல்ல அவளிடம் இருந்து எந்த இரு கால்லோ இல்லை..

இறுதியில் அவன் மொபைலை காணவில்லை என்று கூற பிற நண்பர்கள் தொடர்பு கொல்ல, எந்த ஒரு பெண்ணின் நம்பரில் இருந்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

திடீரென்று அவன் இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று அவன் நண்பனிடம் அவன் புதிய எண்ணை சொல்ல, ஏன் எவளோ நாளாக சொல்லவில்லை என்று ஒருவன் கேட்க அவன் உண்மையை சொன்னான்..

மறுநாள் அவனுடைய நண்பன் ஒருவனிடம் சொல்ல என்று அது காட்டு தீயாய் பறந்தது.. இறுதியாய் அவ காள் காதுக்கு சென்றது..அவள் நேரடியாக அவனிடம் ஏன் என்று கேக்க, பேச, எண்களை பரிமாற நண்பர்களாக மாறினார்..

இதில் இருந்து என்ன சொல்ல ட்ரை  பண்ணுற என்று மட்டும் கேக்காதீங்க.. அது உங்களுக்கே புரிந்துஇருக்கும்.. :) புரியலைன்னா என்னைய கேக்காதீங்க..:)

Friday, October 18, 2013

ஒரு பேருந்து நிறுத்தத்தில்...

ஒரு பேருந்து நிலையத்தில்  நான் பார்த்தது...

ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண் மிகவும் படபடப்பாக நின்று கொண்டுஇருந்தாள்..

அவள் ஒரு பேருந்துக்காக வெகுநேரம் காத்துகொண்டு இருந்தாள்.

அந்த வழியில் ஒரு பேருந்து வந்ததும் விரைவாக ஓடினாள்.ஆனால் அந்த கூட்டத்தில் அவளால் ஏற முடியவில்லை..




மற்றொரு பேருந்தும் வந்தது.. அதில் ஏற அவள் விரைந்தும்  அவளாள் ஏறமுடியவில்லை..

அதுத்த கனமே மற்றொரு பேருந்தில் ஏறினாள்..  அது பிற பேருந்தை விட டிக்கெட்டின் விலை மலிவாகவும் இருந்தது.. முந்தைய பேருந்தை போல் கூட்டமாக  இல்லாமல் அவளுக்கு உட்கார இடமும் கிடைத்தது..

அவள் பயணித்து செல்லும் பாதையில் பார்த்தாள்.. முன்னே வந்த பேருந்துகள் கூட்ட நெரிசலால் நின்றுகொண்டிருந்தது.. ஆனால் அவர் ஏறிய பேருந்து எல்லாவற்றையும் தாண்டி முன்னே சென்றுகொண்டிருந்தது..

                                          

அவளும் சந்தோசமாக பயணித்து செல்ல விரும்பும் இடத்திற்கு விரைவில் சென்றாள்..

அவள் எதற்க்காக படபடப்புடன் நின்றாள் என்று எனக்கு தெரியாது.. ஆனால் எனக்கு அப்பொழுது தான் நான் புரிந்தது.. நமக்கென்று கிடைக்கும் ஒன்று தாமதமாக கிடைத்தாலும் நம் மனதிற்கு அது பின்னே சந்தோசம் அளிக்கும் ..!!